News August 23, 2025
இன்று மதியம் 2 மணிக்கு மேல்.. அலர்ட்.. அலர்ட்..

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (மதியத்திற்கு மேல்) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News March 15, 2026
கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவு

TN, புதுச்சேரியை போல அண்டை மாநிலமான கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 126 தொகுதிகள் கொண்ட அசாமில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 15, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.6 கடைசி நாளாகும். அதற்கு அடுத்த நாள் (ஏப்.7) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளன. ஏப்.9 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். SHARE
News March 15, 2026
மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல்

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29-ம் தேதியும் நடைபெறவுள்ளது. மே.4-ல் வாக்கு எண்ணிக்கை நடக்கும்.


