News September 22, 2025
இன்று மதியம் 12:45 மணிக்கு..

பெரிதும் எதிர்பார்க்கப்படும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் இன்று மதியம் 12: 45 மணிக்கு வெளியாகவுள்ளது. தமிழில் இதனை சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படத்தில், ருக்மணி வசந்த் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். 2022-ல் வெளியான ‘காந்தாரா’ படம் பெரும் வரவேற்பை பெற்று ₹400 கோடி வரை வசூலித்தது. KGF படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Similar News
News September 22, 2025
விஜய் பிளானில் மீண்டும் மாற்றம்

வரும் 27-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் சேலம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக 27-ம் தேதி சென்னை, திருவள்ளூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால் அதில் மாற்றம் செய்து, நாமக்கல், சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சேலத்துக்கு பதிலாக கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
News September 22, 2025
டிரம்ப் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ஆப்கன்

பக்ராம் விமானப்படை தளத்தை கொடுக்க சொல்லி டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது ஆப்கன் அரசு. ஆப்கன் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது எனவும், நாட்டின் சுதந்திரம் மிகவும் முக்கியம் எனவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி ஃபாசிஹுதீன் ஃபித்ரத் கூறியுள்ளார். அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க டிரம்ப் விரும்புகிறார்.
News September 22, 2025
BREAKING: தங்கம் விலை புதிய Record

ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹70 உயர்ந்து ₹10,360-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹82,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ₹83 ஆயிரத்தை நெருங்குவது இதுவே முதல்முறை. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.