News January 27, 2025
முதுமையிலும் இளமையாக இருக்க…

கருஞ்சீரகம் 50 gm, ஓமம் 100 gm, வெந்தயம் 200 gm எடுத்து இளஞ்சூட்டில் வறுத்துக்கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு பொடிபோல அரைத்துக்கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பொடியை நாள்தோறும் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு ஸ்பூன் சுடு தண்ணீரில் கலந்து பருகலாம். தினசரி இவ்வாறு குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் உள்பட அனைத்துவித கழிவுகளும் வெளியேறிவிடும். முதுமையிலும் உடல் அரோக்கியமாக இருக்கும்.
Similar News
News August 29, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களின் பெறப்பட்ட மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். விடுபட்டு போன தகுதியான மகளிர் அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். திட்டத்தில் ₹1,000 பெற தகுதியுள்ள மகளிரின் முதற்கட்ட பட்டியல் விரைவில் வெளியிட இருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News August 29, 2025
மக்களின் வலியை புரிந்து கொள்ளுமா திமுக? EPS

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டதற்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள், அஸ்தியை கரைப்பது போல, வைகையாற்றில் குப்பைபோல் போடப்பட்டுள்ளது. மக்களின் வலி, உணர்வு, வேதனைகளை புரிந்துக் கொள்ளாமல் நாடகமாடும் திமுகவிற்கு 2026-ல் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
News August 29, 2025
100 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்.. சொதப்பிய ஷமி

துலீப் டிராபி தொடரில் East Zone அணிக்காக விளையாடும் ஷமி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட்டில் மீண்டும் களமிறங்கியுள்ள அவர், North Zone-க்கு எதிரான ஆட்டத்தில், 23 ஓவர்களை வீசி 100 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
மேலும், வெறும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். ஃபிட்னஸ் பிரச்னை காரணமாக 2023 WTC-க்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.