News March 17, 2024
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க, பொதுமக்களுக்காக 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை 14.03.2024 முதல் இயங்கி வருகிறது. பொதுமக்கள் 044-27660641, 044-27660642, 044-27660643, 044-27660644 மற்றும் 1800 425 8515 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும் தங்கள் புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
திருவள்ளுர்: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளுரில் பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு இன்று உபரி7,500 கன அடியில் இருந்து 9,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிகரிப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News October 25, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு (நவம்பர் 1) அன்று காலை 11.00 மணியளவில் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ள வேண்டும். அதில் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
News October 25, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் (அக்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


