News September 11, 2025
வியாழக்கிழமைகளில் குரு பகவானின் முழு அருள் பெற…

ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
பொருள்:
இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன். Share it.
Similar News
News September 11, 2025
BREAKING: தங்கம் விலை.. நிம்மதியான செய்தி

சென்னையில் தங்கம் விலையில் தொடர்ந்து 2-வது நாளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. செப்.8 மற்றும் செப்.9-ம் தேதிகளில் சவரனுக்கு ₹1,160 உயர்ந்தது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டது. ஆனால், நேர்மாறாக தொடர்ந்து 2-வது நாளாக விலையில் மாற்றமின்றி 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், 1 சவரன் ₹81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
News September 11, 2025
T20 கிரிக்கெட்டில் சாதித்த இந்திய அணி!

நேற்றைய ஆசிய கோப்பை போட்டியில், UAE-க்கு எதிராக 4.3 ஓவர்களில் அதாவது, 93 வித்தியாசத்தில் வைத்து வெற்றி பெற்ற இந்திய அணி மாபெரும் சாதனையை படைத்துள்ளது. T20-ல் அதிக பந்துகள் வித்தியாசத்தில் இந்திய அணி பெறும் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர், 2021-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 81 பந்துகளில் வெற்றி பெற்றதே இந்தியாவின் பெரிய வெற்றியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 11, 2025
மீண்டும் சரிந்த சந்தைகள்.. முதலீட்டாளர்கள் கலக்கம்!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(செப்.11) சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 81,217 புள்ளிகளிலும், நிஃப்டி 27 புள்ளிகள் சரிந்து 24,945 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. ICICI Bank, Dr Reddys Labs, Hero Motocorp உள்ளிட்ட முக்கிய நிறுவங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.