News March 16, 2025

கரப்பான் பூச்சியை ஒழிக்க…

image

கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது கரப்பான்பூச்சி. இதை ஒழிக்க ஒரு முட்டை வெள்ளைக் கருவில் 2 ஸ்பூன் போரிக் ஆசிட் பவுடர், 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை கரப்பான்பூச்சி வரும் இடங்கள், அட்டைப் பெட்டிகள், மூலைகளில் வைத்தால் கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக நீங்கும்.

Similar News

News March 16, 2025

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: மனிதம் எங்கே?

image

வங்கதேசத்தின் மகுரா நகரில், 8 வயது சிறுமி, தன் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளாள். அப்போது அங்கிருந்த அக்காள் கணவரின் சகோதரன், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், 3 முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் சிறுமி உயிரிழந்தாள். இதையடுத்து, எந்த குழந்தைக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது என, நீதிகோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

News March 16, 2025

அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்: லிங்குசாமி

image

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தின் உழைப்பு, அர்ப்பணிப்பு குறித்து இயக்குநர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். படத்தின் டப்பிங்கிற்காக 50 தடவை பேசச் சொன்னாலும் அஜித் பேசுவார் என அவர் தெரிவித்துள்ளார். அஜித்தின் வெற்றிக்கும், தமிழ் சினிமாவில் அவர் முதல் இடத்தில் இருப்பதற்கும் அதுவே காரணம் என லிங்குசாமி தெரிவித்துள்ளார். அஜித்தின் ஜீ படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார்.

News March 16, 2025

மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு சென்ற SMS

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் பெண்கள், எப்போது அறிவிப்பு வரும் என காத்திருக்கின்றனர். இந்நிலையில், பெண்களின் செல்போன் எண்ணுக்கு தமிழக அரசு தரப்பில் SMS அனுப்பப்பட்டுள்ளது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!