News January 11, 2025
வாக்களித்த மக்களை ஏமாற்றுவதா? விஜய் கொதிப்பு

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்.. என்ற MGR பாடலை சுட்டிக்காட்டி TN அரசை விஜய் விமர்சித்துள்ளார். நீட் ரத்து ரகசியம் தங்களுக்குத் தெரியும் என பிரச்சாரம் செய்த ஆட்சியாளர்கள், தற்போது அந்த அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக கூறுவது ஏமாற்றும் செயல் என்று சாடியுள்ளார். எந்தப் பொய்யையும் சொல்லி, மக்களை ஏமாற்றலாம் என்று கனவு காணும் ஆட்சியாளர்களின் எண்ணம், வரும் காலங்களில் ஈடேறாது என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News August 4, 2025
ENG-ன் வெற்றியை பறித்த சிராஜ் மற்றும் கிருஷ்ணா

IND VS ENG இடையேயான 5-வது டெஸ்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் எப்போதெல்லாம் இங்கி., கை ஓங்கியதோ அப்போதெல்லாம் சிராஜ், பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தனர். இரண்டு இன்னிங்க்ஸ் சேர்த்து சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் 8 விக்கெட்டுகளும் எடுத்தனர். மொத்தமுள்ள 20 விக்கெட்டுகளில் இருவரும் சேர்ந்து 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.
News August 4, 2025
மிரட்டலுக்கு அஞ்சோம்… ரஷ்ய ஆயில் வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்; இல்லையெனில் வரிவிதிப்பு மற்றும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று இந்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வார இறுதியில் கூட ரஷ்யாவிலிருந்து மில்லியன் கணக்கான பேரல்கள் எண்ணெய், இந்திய துறைமுகங்களை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 4, 2025
₹105 கோடியை வசூலித்தது ‘மகாவதாரம் நரசிம்மா’

‘மகாவதாரம் நரசிம்மா’ படத்தின் வசூல் ₹105 கோடியை தாண்டிவிட்டதாக ஹோம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இரணியகசிபு, அவரது மகன் பிரகலாதன், மகா விஷ்ணுவை மையமாக வைத்து புராண அனிமேஷன் படமாக தயாரித்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. ‘மகாவதார் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’-ன் கீழ் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்களை தயாரித்து அடுத்தடுத்து வெளியிடவுள்ளது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?