News July 4, 2025
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…

மழை சீசனில் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம். இந்நிலையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உணவுகள் உதவும்: *சீசன் பழங்கள்: ஆப்பிள், நாவல், லிச்சி, பப்பாளி, பேரிக்காய், மாதுளை *தயிர், மோர் -அளவுடன் பகலில் மட்டும் *சுண்டைக்காய், வேப்ப விதைகள், மூலிகை டீ போன்ற கசப்பு உணவுகள் *வேகவைத்த காய்கறிகள் *கொய்யா, ஆரஞ்சு (வைட்டமின் சி பழங்கள்) *இஞ்சி, பூண்டு *மத்தி மீன், இறால், நட்ஸ், அவகாடோ உள்ளிட்டவை.
Similar News
News July 5, 2025
உலக சாம்பியன் குகேஷ்.. மீண்டும் அசத்தல்!

உலக சாம்பியனான டி. குகேஷ், குரோஷியாவின் சாகிரெப்பில் நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ராபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், ராபிட் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இது 2025 கிராண்ட் செஸ் டூர் போட்டியின் ஒரு பகுதியாகும். 19 வயதான குகேஷ், அமைதியான அணுகுமுறை, துல்லியமான தந்திரங்கள் மற்றும் மின்னல் வேக ஆட்டத்தால் 18-க்கு 14 புள்ளிகள் பெற்று, அபாரமாக வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
News July 5, 2025
காதலிக்கு ‘நோ’.. மாணவி முகத்தில் கத்தி கீறல்!

+2 மாணவி ஒருவரை காதலிக்க மறுத்ததால், அவரது முகத்தில் பேனா கத்தியால் கிழித்த இளைஞர் இளைஞரை போலீஸ் தேடி வருகிறது. விருத்தாசலத்தில், ஒரு வருடமாக பின்னால் அலைந்து காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் அருள்குமார். இந்நிலையில், இன்று பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தபோது இந்த கொடூரத்தை செய்துவிட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
News July 5, 2025
வரலாற்றில் இன்று

1954 – பிபிசி தனது முதல் டிவி செய்தியை ஒளிபரப்பியது. 1971 – அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது. 1977 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது PM சுல்பிகார் அலி பூட்டோ பதவி இழந்தார். 1996 – குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது. 1998 – செவ்வாய்க் கோளுக்கு ஜப்பான் தனது முதலாவது விண்கலத்தை ஏவியது.