News August 22, 2025
முதுகுவலியை தவிர்க்க… இதை ட்ரை பண்ணுங்க

அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்னையாக முதுகுவலி உள்ளது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தசை இறுக்கம், நீண்ட தொலைவு பயணம், கனமான பையை சுமப்பது போன்றவை இதற்கு காரணமாகலாம். இதை தவிர்க்க, *30 mins-க்கு ஒருமுறை, உட்கார்ந்த இடத்திலிருந்தே திரும்புதல், நேராக உட்காருதல், அடிக்கடி எழுந்து உட்காருவது, நடை போன்ற பயிற்சிகளை செய்யலாம். *பாயில் படுத்து உறங்குவது பெரும்பாலான முதுகுவலிகளை குணப்படுத்திவிடும்.
Similar News
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமிக்கு வலியுறுத்தல்

புதுச்சேரி NDA-வில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைப்பதில் பாஜக, NR காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறியில் நீடிக்கிறது. இதனிடையே CM ரங்கசாமி தலைமையிலான நடந்த அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முக்கிய முடிவு எடுப்பதற்கு முன் ரங்கசாமி சேலத்திலுள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு ரங்சாமி சென்றுள்ளார்.
News March 19, 2026
ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு: ஈரான்

தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் படுகொலைக்குப் பழிவாங்குவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சூளுரைத்துள்ளார். இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகள் எதிரிகளின் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவதாகவும், இதற்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் விலை கொடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 19, 2026
வரலாற்றில் இன்று

➤1944 – ஜெர்மனியின் நாஜிப் படை ஹங்கேரியைக் கைப்பற்றியது.
➤1972 – இந்தியா – வங்காளதேசம் இடையே 25 ஆண்டு கால அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் டாக்காவில் கையெழுத்தானது.
➤1998 இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார்.
➤2003 ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கின.
➤2008 நடிகர் ரகுவரன் மறைந்த நாள்.


