News April 11, 2025

முதுகுவலியை தவிர்க்க…

image

அனைவருக்குமே முதுகுவலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தசை இறுக்கம், நீண்ட தொலைவு பயணம், கனமான பையை சுமப்பது உள்ளிட்டவை இதற்கு காரணமாகலாம். இதை தவிர்க்க, உட்கார்ந்த இடத்திலிருந்தே முடிந்தவரை திரும்புதல், நேராக உட்காருதல், அடிக்கடி எழுந்து உட்காருவது, நடைபயிற்சி போன்ற பயிற்சிகளை செய்யலாம். பாயில் தரையில் படுத்து உறங்குவது பெரும்பாலான முதுகுவலிகளை குணப்படுத்திவிடும்.

Similar News

News April 18, 2025

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் RCB

image

PBKS அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், முதல் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது RCB அணி. டாஸ் வென்ற PBKS அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய RCB அணியின் வீரர்கள் சால்ட் (4), கோலி (1), லிவிங்ஸ்டன் (4) என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது, RCB 4 ஓவர்களுக்கு 26-3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

News April 18, 2025

வரலாறு படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்

image

சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல உள்ளார். நாசா, ஆக்சியோம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு அனுப்புகிறது. அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாட்டவருடன் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுபான்ஷு மே மாதம் செல்ல உள்ளார்.

News April 18, 2025

மாரடைப்பு: கிரிக்கெட் மைதானத்தில் நடுவர் மரணம்

image

கிரிக்கெட் போட்டியின் இடையே நடுவர் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பாமா கோப்பை போட்டியில் KRP XI CC மற்றும் Crescent CC அணிகள் மோதின. 11ஆவது ஓவரின்போது நடுவர் பிரசாத் மல்காஓங்கர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹாஸ்பிடல் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!