News August 17, 2024

TNUSRB தலைவரானார் சுனில்குமார்

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக, Ex DGP சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சார்பு ஆய்வாளர், 2ஆம் நிலை சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர்கள் போன்ற தேர்வுகளை TNUSRB நடத்தி வருகிறது. இதன் தலைவராக இருந்த சீமா அகர்வால், சமீபத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக இருந்து 2021இல் ஓய்வுபெற்ற சுனில்குமார், தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News December 5, 2025

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

சென்னையில் நாளை (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாகலாம்.

News December 5, 2025

அதானி குழுமத்திற்கு ₹48,000 கோடி கொடுத்த LIC

image

அதானி குழுமத்தின் கடன்களை தீர்க்க LIC பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து பார்லி.,யில் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி குழுமத்தில் LIC ₹48,284.62 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முதலீட்டை செய்ய சொல்லி அரசு உத்தரவிடவில்லை எனவும், LIC தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2025

சற்றுமுன்: விலை மளமளவென சரிந்தது

image

கார் பிரியர்களுக்கு சிறப்பான செய்தியை மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் Arena ஷோரூம்களில் பல மாடல் கார்களுக்கு, டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ₹58,100 வரை கஸ்டமர்கள் சேமிக்கலாம். எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!