News May 18, 2024
118 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர், முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 – 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு <
Similar News
News March 17, 2026
BREAKING: விஜய் அறிவிக்கிறார்

மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், ஓரிரு நாள்களில் வேட்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு குறைவான நாள்களே உள்ளதால், வேட்பாளர்கள் பட்டியலுடன் தேர்தல் அறிக்கையையும் சேர்த்து வெளியிட உள்ளாராம். ஏற்கெனவே, பெரம்பூர் தொகுதியில் விஜய், போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், அங்குத் தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணியை புஸ்ஸி ஆனந்த் தீவிரப்படுத்தியுள்ளார்.
News March 17, 2026
சட்டப்பேரவைத் தேர்தலில் கனிமொழி?

தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் கனிமொழி, மாநில அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி, திருவாரூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கனிமொழி போட்டியிட வேண்டும் என விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
News March 17, 2026
மம்தாவுக்கு எதிராக போட்டியிடும் அவரது EX தளபதி!

2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மே.வங்கத்திற்கு 144 பேரை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், CM மம்தா பானர்ஜியின் பபானிபூர் தொகுதியில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும், மம்தாவின் EX தேர்தல் படை தளபதியுமாக இருந்த சுவேந்து அதிகாரி களமிறக்கப்பட்டுள்ளார். இவர், 2021 தேர்தலில் மம்தா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


