News January 9, 2025

TNPSC குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு

image

TNPSC குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. VAO, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்தாண்டு ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடந்தது. 6,244 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று முறையே 480, 2,208, 559 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், மேலும் 41 பணியிடங்கள் சேர்த்து 9,532ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

நெல்லை: குளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

களக்காடு அருகே கக்கன் நகரைச் சேர்ந்த வேல்மயில் (67) நேற்று பகலில் பொருள் வாங்க களக்காடு சென்றார். வியாசராசபுரம் அருகே குடிநீர் தாங்கி குளக்கரையில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். களக்காடு போலீஸார்சம்பா இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 8, 2025

தாய்லாந்து-கம்போடியா மோதல்: மீண்டும் போர் பதற்றம்!

image

கடந்த அக்டோபர் மாதம் தான், டிரம்ப் முன்னிலையில் <<17232581>>தாய்லாந்து-கம்போடியா<<>> போர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், 2 மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், இன்று எல்லையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தங்கள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக கூறி, கம்போடியாவின் ராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதை கம்போடியா மறுத்துள்ள நிலையில், மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

News December 8, 2025

விஜய் பரப்புரைக்கு TN-ல் இருந்து யாரும் வராதீங்க: TVK

image

புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ள விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு TN-ல் இருந்து யாரும் வர வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். உப்பளத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கடலூர், விழுப்புரத்திலிருந்து கூட்டம் வரும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!