News October 25, 2024

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்: வெளியான முக்கிய அறிவிப்பு

image

குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 8,932 பணியிடங்களுக்கு ஜூன் 9இல் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 15.8 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவு அக்டோபரில் வெளியாகும் என முன்பு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அக்.28இல் நடைபெறும் TNPSC நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News January 15, 2026

10th Pass போதும், ₹19,900 சம்பளம்.. நாளையே கடைசி!

image

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 173 பணியிடங்கள் காலியாக நிரப்பப்படவுள்ளன. சம்பளம்: மாதம் ₹19,900 – ₹78,800. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18 – 50. தேர்வு செய்யும் முறை: Written Test, Trade Test/ Skill Test/ Interview. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16. விண்ணப்பதாரர்கள் <>https://ncert.nic.in/<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

News January 15, 2026

புதுசா பொங்கல் வைக்க போறீங்களா? இத கவனிங்க!

image

வாசலில் அரிசி மாவால் கோலமிட வேண்டும். பொங்கல் பொங்க உள்ள அடுப்பு, பாத்திரங்களில் மஞ்சள், குங்குமம் இடுங்கள். பாத்திரத்தில் தண்ணீர் ஊறவைத்த அரிசி, பருப்புடன் வெல்லம், முந்திரி, திராட்சையை சேர்த்து பொங்கல் வையுங்கள். பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என ஆனந்தமாக சொல்லுங்கள். பானையை இறக்கி சூரிய வழிபாடு செய்யுங்கள். பின்னர் இலையில் வைத்து காகங்களுக்கு படையுங்கள். தைப்பொங்கல் இனிக்கட்டும்!

News January 15, 2026

BREAKING: ஜன நாயகன்.. சற்று நேரத்தில் புதிய அப்டேட்

image

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் வழங்கக்கோரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு SC-யில் விசாரணைக்கு வருகிறது. U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து படக்குழு தொடர்ந்த வழக்கில், SC இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது. ஒருவேளை சென்சார் கொடுக்க ஆணையிட்டால், விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!