News April 30, 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவு?

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என உத்தேச அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்.14-ல் நடைபெற்று, டிசம்பரில் முடிவுகள் வெளியாகின. மேலும், நடப்பாண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு ஜூலை 15-ல் வெளியாகி, செப்டம்பரில் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News November 27, 2025
சபரிமலையில் 9 பேர் உயிரிழப்பு: அடுத்தடுத்து சோகம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 10 நாள்களில் மட்டும் 8 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று கோவையைச் சேர்ந்த பக்தர் முரளி(50), மாரடைப்பால் இறந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் பக்தர்களே!
News November 27, 2025
சத்தியத்தை காப்பாற்ற சொல்லி பதிவிடவில்லை: DKS

கர்நாடகா காங்.,கில் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்ற <<18401800>>DKS-ன்<<>> X பதிவு அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதை தான் பதிவிடவில்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே DKS-ஐ CM ஆக்கினால் ஆதரவு தருவேன் என CM ரேஸில் உள்ளவரும், சித்தராமையாவின் தீவிர ஆதரவளருமான, மூத்த அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
News November 27, 2025
WPL திருவிழா: ஜன.9-ல் தொடங்குகிறது

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஜன.9-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நவி மும்பையில் உள்ள DY Patil மைதானம், வதோதராவில் உள்ள BCA மைதானத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 3 சீசன்களில், 2 முறை மும்பையும், ஒரு முறை பெங்களூருவும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


