News September 14, 2024
TNPSC குரூப்-2 தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தொடங்கியுள்ளது. 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2, 2ஏ தேர்வை TNPSC நடத்துகிறது. இதற்கான முதல்நிலை தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியுள்ளது. 7.93 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
நெல்லை: வெண்கல பானைக்குள் சிக்கிய குழந்தை

மேலப்பாளையம் ராஜா நகர் 4வது தெருவில் நேற்று சிறு குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் உள்ள வெண்கல பானைக்குள் தலை சிக்கிக் கொண்டது. இதுக்குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு,
மேலப்பாளையம் காவல்துறையினர் விரைந்து சென்று வெண்கல பானையை வெட்டி அகற்றி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
News January 12, 2026
ராஜ்யசபா + 30 தொகுதிகள்.. பிரேமலதா கறார்!

தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜ்யசபா சீட்டுடன் 30 தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என EPS-யிடம் பிரேமலதா கறாராக கூறிவிட்டாராம். தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா MP-க்களை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், தேமுதிகவின் கோரிக்கை குறித்து அதிமுக தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.
News January 12, 2026
உலகின் மிகப்பெரிய கோயில்கள்

கோயில்கள் பல நூற்றாண்டுகளை கடந்து வரலாற்றையும் கட்டடக்கலையையும் பறைசாற்றுகின்றன. பெரும்பாலான கோயில்கள் மிகப்பெரிய பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய கோயில்கள் என்னென்னவென்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த கோயிலுக்கு போயிருக்கீங்க?


