News December 21, 2024
TNPSC குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு தேதி மாற்றம்

TNPSC குரூப் 2, 2ஏ மெயின் தேர்வுகள் 2025 பிப்ரவரி மாதம் 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதில் முதல் தாளுக்கான தேர்வு 2025 பிப்ரவரி 8ஆம் தேதிக்கும், 2ஆம் தாளுக்கான தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டு உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. அதேபோல், தேர்வு முறைகளும் புதிதாக மாற்றப்பட்டு உள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது.
Similar News
News July 6, 2025
FLASH: கி.வீரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி(91) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி, மயக்கம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News July 6, 2025
மீன்களின் விலை குறைவு.. அலைமோதும் மக்கள் கூட்டம்!

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது. சென்னை காசிமேடு, தூத்துக்குடி, நாகை மீன்பிடி துறைமுகங்களில் மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. சென்னையில் மீன்கள் விலை குறைந்து 1 கிலோ நெத்திலி- ₹150, சீலா- ₹350, இறால்- ₹300, சங்கரா மீன்- ₹150, மத்தி- ₹100, வஞ்சிரம்- ₹700, நண்டு- ₹150, வாவல் மீன்- ₹500-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் நாகையில் மீன்கள் விலை சற்று அதிகரித்துள்ளது.
News July 6, 2025
பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்: PM மோடி

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என டிரினிடாட் & டொபாகோ பார்லிமென்ட்டில் PM மோடி பேசியுள்ளார். அவையில் பெண் MP-க்கள் அதிகமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக கருதுவதாகவும் கூறினார். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கான மரியாதை ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும், நவீன இந்தியாவை உருவாக்க பெண்களின் கரங்களை வலுப்படுத்துகிறோம் என்றும் கூறினார். அடுத்த லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வருகிறதோ?