News September 14, 2024
TNPSC Exam: நெல்லையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பாளை., அம்பை, சேரை., நெல்லை பகுதிகளில் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 20 ஆயிரத்து 223 பேர் இன்று(செப்.,14) TNPSC குரூப் 2, 2A முதல் நிலைத் தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்வு நடக்கும் இடத்திற்கும், தேர்வு முடிந்த பின் செல்வதற்கு ஏதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT.
Similar News
News August 30, 2025
பேட்டையில் ஒர்க் ஷாப் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை பேட்டையில் டூவீலர் ஒர்க் ஷாப் கடை நடத்தி வருபவர் பாருக். இவருடைய கடைக்கு நேற்று இரவு ஒருவர் தன்னுடைய வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை, அதனை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு பாரூக், நான் மருத்துவமனைக்கு செல்லவதால் வர இயலாது எனக் கூறியுள்ளார். கோபமடைந்த அந்த நபர் அறிவாளை எடுத்து பாருக்கை வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த பாரூக் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News August 30, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.29] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News August 29, 2025
BREAKING நெல்லை: திமுக நிர்வாகிக்கு கத்தி குத்து

நெல்லையை சேர்ந்தவர் பெருமாள். தற்போது திமுகவில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ஆக உள்ளார். கங்கைகொண்டான் அருகே தாமிரபரணி பொறியியல் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை கல்லூரி நிர்வாக குழு கூட்டத்தில் நடைபெற்ற பிரச்னையில் அவரை ஒரு தரப்பினர் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.