News July 5, 2025
வேலைவாய்ப்பு இலக்கை முந்தி TNPSC சாதனை..

ஜனவரி 2026-க்குள் 17,595 காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை 17,702 இளைஞர்களை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம், 7 மாதங்களுக்கு முன்பாகவே நிர்ணயித்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது TNPSC. மேலும் கூடுதலாக 2500+ இடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அது 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் எனவும் TNPSC அறிவித்துள்ளது.
Similar News
News July 5, 2025
பாமகவுக்கு பிரச்னைக்கு தீர்வு சொன்ன GK மணி!

ராமதாஸும், அன்புமணியும் அமர்ந்து பேசினால் மட்டுமே பாமகவில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு எட்டும் என GK மணி கூறியுள்ளார். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவது, கருத்து கூறி வருவது தொடர்ந்தால் கட்சி நலிவு பெறும் என வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், பாமகவில் நிலவும் பிரச்னைக்கு எந்த கட்சியும் காரணமல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக திமுகவே காரணம் என அன்புமணி பேசியது கவனிக்கத்தக்கது.
News July 5, 2025
விரைவில் 7ஜி ரெயின்போ காலனி-2 டீசர்

இன்றைய இளைஞர்கள் மனதிலும் பதிந்த படம் தான் ‘7ஜி ரெயின்போ காலனி’. இதன் 2-ம் பாகம் உருவாகிவரும் நிலையில், ரவி கிருஷ்ணாவின் அண்ணனும், இயக்குநருமான ஜோதி கிருஷ்ணா அப்டேட் கொடுத்துள்ளார். யுவன் 3 பாடல்களுக்கு இசையமைத்து விட்டதாகக் கூறிய அவர், முதலில் டீசரை வெளியிட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தில் ‘குருவாயூர் அம்பலநடையில்’ நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.
News July 5, 2025
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார்

மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) காலமானார். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை உள்ளிட்ட நூல்களை எழுதிய அவர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்தவர். திமுகவின் பிரச்சார முழக்கமான ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம் என்ற கவிதையை நேற்று எழுதியபின் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.