News December 31, 2024
TNPSC தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

கரூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News October 18, 2025
ரேஷன் கடைகள் தற்போது பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்

கரூரில் தற்போது வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. என்றும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல் அறிவித்துள்ளார்.
News October 18, 2025
குளித்தலை அருகே டிராக்டர் மோதி பெண் பலி!

குளித்தலை அடுத்த குண்டன் பூசாரி கிராமத்தில்,நேற்று முன்தினம் சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த கன்னியம்மாள், (30), பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த வள்ளி, (70), ஓந்தாய், (70), ஆகியோர் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உழவு பணி மேற்கொள்ள வந்த டிராக்டர் கன்னியம்மாள் உள்பட மூவர் மீதும் மோதியது. இதில் ஓந்தாயி உயிரிழந்தார். தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News October 18, 2025
ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் கரூரில் விசாரணை

கரூர் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் விசாரணை நடத்த கரூர் வந்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ளனர். பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையில், ஏடிஎஸ்பி முகேஷ்குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.