News January 11, 2026

TNPSC தேர்வர்களே இது உங்களுக்குதான்..!

image

TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராக TN அரசு இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. நாளை முதல் ஜன.16 வரை கல்வித் தொலைக்காட்சியில் காலை 7 – 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகும். இது மாலை 7 – 9 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும். TN Career Service Employment என்ற யூடியூப் சேனலிலும் இதனை காணலாம். மேலும், <>tamilnaducareerservices.tn.gov.in<<>> இணையதளத்தில் பாடக் குறிப்புகளை டவுன்லோடும் செய்யலாம். SHARE

Similar News

News February 14, 2026

பிரேமலதா மௌனத்திற்கு இதுவே காரணமா?

image

திமுக அரசு நேற்று மகளிரின் வங்கிக் கணக்கில் ₹5,000 வரவு வைத்ததை, தோல்வி பயத்தில் தருவதாக அதிமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆனால், இதுகுறித்து பிரேமலதா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். சமீபகாலமாக திமுக ஆட்சி மீதான விமர்சனங்களை குறைத்த அவர், திமுக கூட்டணியில் இணையும் நோக்கில்தான் தற்போதும் மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சிக்கவில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

News February 14, 2026

பறவைக் காய்ச்சலால் சிக்கன் சாப்பிட பயமா?

image

பறவைக் காய்ச்சலால் காகம் இறந்து விழுந்ததை அடுத்து, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து, சிக்கன் & முட்டையை சாப்பிடக்கூடாது என தகவல் பரவியது. இந்நிலையில், சிக்கன், முட்டையை நன்றாக வேகவைத்து சாப்பிடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளியால் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஹாஸ்பிடல் செல்ல வேண்டும். சந்தேகங்களுக்கு 104-க்கு போன் செய்யலாம். SHARE

News February 14, 2026

அரசு ஹாஸ்பிடலில் குழந்தை கடத்தல்… கொந்தளித்த விஜய்

image

திருச்சியில் அரசு ஹாஸ்பிடலில், பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், ‘மக்களுக்கான அரசு’ என்று மார்தட்டிக்கொள்ளும் திமுக ஆட்சியில், அரசு ஹாஸ்பிடலிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறிபோகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் CM உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!