News February 4, 2026

TNPSC குரூப் 4 கலந்தாய்வு தேதி வெளியானது

image

TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பிப்.24, 25-ல் 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூலச்சான்று சரிபார்ப்பு நாள் & விவரங்களை www.tnpsc.gov.in-ல் காணலாம். இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஆனால், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் தேர்வு செய்யப்படுவர் என உறுதி தர இயலாது எனவும் TNPSC விளக்கமளித்துள்ளது.

Similar News

News February 14, 2026

த்ரிஷாவின் காதலர் தின கொண்டாட்டம்❤️❤️

image

காதலர் தினத்தை தனது செல்லப்பிராணிகளுடன் த்ரிஷா உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இன்ஸ்டாவில் தான் வளர்க்கும் நாய் குட்டிகளின் போட்டோக்களை பகிர்ந்த அவர் ‘எல்லாமே என்னுடையது தான்’ என காதலர் தின வாழ்த்துகள் கூறியுள்ளார். இதற்கு ❤️❤️ விடும் ரசிகர்கள், நாய் குட்டிகள் க்யூட் ஆக உள்ளது என்றும், Happy Valentines Day எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News February 14, 2026

தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

image

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.

News February 14, 2026

கார்களின் விலை ₹55,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார் வாங்கப் போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், மாருதி தனது Ignis, Baleno, Fronx, Grand Vitara, Jimny போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹1,75,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு சலுகை என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!