News December 31, 2024
TNPSC தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

கரூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News December 19, 2025
கரூர்: மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை (டிச.20) தென்னிலை, க.பரமத்தி, நொய்யல், ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆண்டிசெட்டிப்பாளையம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், தென்னிலை, மொஞ்சனூர், பூலாம்பட்டி, அத்திபாளையம், குப்பம், நொய்யல், குளத்துபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்காது.
News December 19, 2025
கரூர் துயரம்; விஜய் குறித்து பரபரப்பு போஸ்டர்கள்

கரூர் மாவட்டத்தில், வடிவேல் நகர் பகுதியில் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளது. இதன் தொடர்பாக ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் பற்றி தனித்துவ போஸ்டரால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரில் இங்கிருந்து ஆடியோ லான்ச்சுக்கு மலேசியா செல்கிறீர்கள், மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிகிறீர்கள், ஏன் கரூருக்கு செல்லவில்லை என வாசகம் பதியப்பட்டிருந்தது.
News December 19, 2025
அரவக்குறிச்சி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் டிசம்பர் 20, 2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 17 சிறப்பு மருத்தவர்கள் பங்கேற்று பரிசோதனைகள், இரத்தம் பரிசோதனை உள்ளிட்ட சேவைகள் வழங்கவுள்ளனர். முதல்வர் காப்பீட்டு அட்டைக்கு ஆதார், ரேஷன் கார்டுடன் வர வேண்டியது அவசியம்.


