News September 14, 2024

TNPSC தேர்வினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் TNPSC Group 2 – தேர்வினை மாவட்ட ஆட்சியர் சி. பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில நடைபெற்ற குரூப்-2 எழுத்து தேர்வினை 15,708 பேர் கலந்து கொண்டு எழுதினார்கள். 5,372 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 24, 2025

விழுப்புரம்: ரூ.2000 பணத்திற்காக தாக்கப்பட்ட வாலிபர்!

image

விழுப்புரம்: மணி நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தாய் ரேகா, வி.மருதுாரைச் சேர்ந்த சற்குணம் என்பவரிடம் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ரூ.10,000 வாங்கியுள்ளார். இதில் ரூ. 8,000 திருப்பி தந்த நிலையில், மீதம் ரூ. 2,000 தர வேண்டியிருந்தது. மீதி பணத்தை சற்குணத்தின் பேரன் பாலாஜி நேற்று முன்தினம் விக்னேஷிடம் கேட்டு பயங்கரமாக தாக்கியுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 24, 2025

விழுப்புரம்: கிணற்றில் குளித்த வாலிபர் வலிப்பு வந்து இறப்பு!

image

விழுப்புரம்: செல்லங்குப்பத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (32), நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாத நிலையில், தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், அவரை பிணமாக மீட்டனர். குளித்துக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென வலிப்பு வந்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

News November 24, 2025

மேல்மலையனூர் தவற விட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

image

மேல்மலையனூர் ஶ்ரீ அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவத்தின் போது தவறவிட்ட எட்டு சவரன் நகை_ பாதுகாப்பு பணியில் இருந்த இரு காவலர்களின் கையில் கிடைத்த நகை உரியவரிடம் இரு காவலர்கள் மூலமாகவே இன்று ஒப்படைக்கப்பட்டதுநகையின் உரிமையாளர் கண்ணீர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

error: Content is protected !!