News July 27, 2024
டிஎன்பிஎல்: திருப்பூர் அணி அபார வெற்றி

டிஎன்பிஎல் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில், திருப்பூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவரில் 169/8 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மான் பாஃப்னா 50, கணேஷ் 39 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய திருச்சி அணி ஆரம்பம் முதலே திணறியது. அந்த அணி 16.5 ஓவரில் 122 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
Similar News
News March 28, 2026
சீர்காழியில் தனி சின்னத்தில் போட்டியிடும் மதிமுக

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. மதுரை தெற்கு, கடையநல்லூர், மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
முழு ஆண்டு தேர்வு.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 1-ல் தொடங்கவுள்ளது. இதனையொட்டி 2 நாள்களுக்கு முன்னதாக, மார்ச் 30-க்குள் (திங்கள்கிழமை) பள்ளி நிர்வாகத்திடம் வினாத்தாள்களை வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. EMIS தளத்தில் வினாத்தாள்களை அலுவலர்கள் டவுன்லோடு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களே, பதற்றமின்றி தேர்வை எழுதுங்கள். ALL THE BEST!!!
News March 28, 2026
125 பட்டதாரிகளை களமிறக்கிய திமுக!

திமுக வெளியிட்ட 164 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் 60 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். 18 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மேலும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 7 பேர், சட்டம் படித்தவர்கள் 29 பேர், 15 டாக்டர்கள் என மொத்தம் 125 பட்டதாரிகளை திமுக இம்முறை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது.


