News October 5, 2025
ஆணவத் திமிருக்கு எதிராக TN போராடும்: CM ஸ்டாலின்

தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டதற்கு, இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என கூறும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும் என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும் என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 5, 2025
விஜய் ரசிகர்களுக்கு சோகம்

‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடலை தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், அதற்குள் கரூர் துயரத்தில் 41 பேர் பலியான சோகம் நிகழ்ந்தது. இதனால், விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பாடலை ரிலீஸ் செய்ய வேண்டாம் என விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது. இதனால், முதல் பாடலை காலவரையின்றி ஒத்திவைக்க படக்குழுவிடம் விஜய் கூறியுள்ளாராம்.
News October 5, 2025
நிச்சயமாக ஒருநாள் கேப்டன் ஆவேன்: ஜெய்ஸ்வால்

ஒவ்வொரு நாளும் தலைவனாவதற்கான பண்புகளை வளர்த்து வருவதாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஒருநாள், நிச்சயமாக இந்திய அணியின் கேப்டனாக களமிறங்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆரம்பத்தில் பானிபூரி விற்று பிழைப்பு நடத்தியதை நினைவு கூர்ந்த அவர், நீங்கள் 100% உழைப்பை செலுத்தினால், எந்த வேலையும் சிறுமை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
டானிக் குடித்த குழந்தைகள் பலி: ம.பி. அரசு மறைக்க முயற்சி?

ம.பி.,யில் இருமல் டானிக் குடித்த குழந்தைகளின் உயிரிழப்புகளை மறைக்க அரசு நிர்வாகம் முயன்றதாக NDTV நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு ஆவணங்களின் படி 11 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், மருத்துவ அதிகாரிகள் நவராத்திரி விடுப்பில் உள்ளதால், இன்னும் ஒரு பிரேத பரிசோதனை கூட செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


