News August 15, 2025
குஜராத்தை விட TN வளர்ச்சியில் பின்னடைவு: L.முருகன்

காங்., ஆட்சிக் காலத்திலேயே அரசுத் துறைகள் அதிகளவில் தனியார்மயமாக்கப்பட்டதாக அமைச்சர் L.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உ.பி., பிஹார், குஜராத் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது TN வளர்ச்சியில் பின்னோக்கி உள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அவர், சமூக நீதியைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை என சாடினார்.
Similar News
News March 9, 2026
FLASH: விலை ₹68,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

மார்ச் மாத சலுகையாக ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. பல்வேறு மாடல் கார்களுக்கு சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளன. கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.
News March 9, 2026
11 நாள்களில் 13,000 கிமீ பறந்து சாதனை

பிறந்து வெறும் 4 மாதங்களே ஆன B6 என்ற பார்-டெயில்ட் காட்விட் பறவை, 2022-ல் 11 நாள்களில் 13,560 கிமீ இடைவிடாமல் பறந்து உலக சாதனை படைத்துள்ளது. பயணத்திற்கு முன் அலாஸ்காவில் அதிக உணவு உண்டு எடையை கூட்டிய இந்த இளம்பறவை, பயணத்தின் போது அந்த கொழுப்பை ஆற்றலாக மாற்றிக் கொண்டு பறந்தது. திறந்த பசிபிக் பெருங்கடலை ஓய்வெடுக்காமலும் சாப்பிடாமலும் தொடர்ந்து பறந்து இறுதியாக ஆஸ்திரேலியாவை சென்றடைந்தது.
News March 9, 2026
விஜய்யிடம் பவன் கல்யாண் பேசியது உண்மை: BJP நிர்வாகி

விஜய்யிடம் பல முனைகளில் இருந்தும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம். அதன்படி, <<19334066>>பவன் கல்யாண்<<>> மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் நேற்று வெளியானது. இந்நிலையில், இது உண்மைதான் என்று பாஜக நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், நயினார் நாகேந்திரன் விஜய்யிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவில்லை என கூறியுள்ளார்.


