News December 3, 2024
15 நகரங்களை ஒதுக்கீடு செய்யக்கோரும் TN அரசு

டெல்லியில் மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டாரை TN மினிஸ்டர் நேரு இன்று சந்தித்தார். அப்போது 100 cities programme for sustainable urban development initiatives” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்திற்கு 15 நகரங்களை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். முன்னதாக நிர்மலா சீதாராமனிடம், ஜல் ஜீவன் திட்டத்தை 2028 வரை நீட்டிக்கவும், ஏற்கெனவே வழங்க வேண்டிய நிதியை தரக்கோரியும் வலியுறுத்தியிருந்தார்.
Similar News
News September 10, 2025
செப்.12-ல் சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் 3வது துணை ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
News September 10, 2025
12 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மழை நேரத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
News September 10, 2025
கால்சியம் சத்து நிறைந்த டாப் 5 உணவுகள்

வலுவான எலும்புகளுக்கு கால்சியம் சத்து மிக அவசியம். நாள் ஒன்றுக்கு நாம் 1,000 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொள்வது அவசியம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கால்சியம் சத்து குறைபாட்டால் எலும்புகள் வலு இழக்கும். கால்சியம் சத்து கிடைக்க பால் குடிக்க வேண்டும் என்பார்கள். வேறு சில உணவுகளிலும் கால்சியம் சத்து நிறைந்திருக்கின்றன.