News September 28, 2025
TN அரசு, போலீஸ் கடமை தவறிவிட்டது: EPS

விஜய்யின் கரூர் பரப்புரையில் TN அரசும், போலீசும் கடமை தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். விஜய் பேசி கொண்டிருந்த போது தொடர்ந்து ஆம்புலன்ஸ் சென்றது சந்தேகத்தை கிளப்புகிறது என்றும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தவெக கூட்டம் அறிவிக்கப்பட்ட போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று EPS பேசினார்.
Similar News
News January 1, 2026
டாக்டர் ஆலோசனையின்றி இனி COUGH SYRUP வாங்க கூடாது!

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் கோல்ட்ரிஃப் Syrup பாதிப்பால் குழந்தை இறந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து WHO விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, Syrup தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. அதனால், டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே இனிமேல் Syrup-ஐ மெடிக்கலில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News January 1, 2026
பொங்கல் கொண்டாடும் அமித்ஷா: கரு.நாகராஜன்

பொங்கலுக்கு பின் பாஜகவின் செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். ஜன.4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, நயினார் பரப்புரை நிறைவு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அதனைத் தொடர்ந்து ஜன.5-ம் தேதி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார் எனத் தெரிவித்தார்.
News January 1, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ₹11 பைசா குறைந்து, ₹89.99 என வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீட்டுச் சந்தையிலிருந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம், வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.


