News September 30, 2025

மக்களை பாதுகாப்பதில் TN அரசு தோல்வி: EPS

image

கரூர் துயரத்திற்கான பொறுப்பில் இருந்து தப்பிக்க ஸ்டாலின் அரசு முயல்வதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கெனவே அருணா ஜெகதீஷன் ஆணையம் விசாரிக்கும் நிலையில், வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க, விபத்துக்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக தெரிகிறது என்றும் EPS சாடியுள்ளார்.

Similar News

News October 1, 2025

எண்ணூர் விபத்து: ₹10 லட்சம் நிதியுதவி CM அறிவித்தார்

image

எண்ணூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். கட்டுமானப் பணியின் போது 9 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்கி CM உத்தரவிட்டுள்ளார். இதே போல PM மோடி உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News October 1, 2025

ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

image

ஆதவ் அர்ஜுனா மீது பின்வரும் 5 பிரிவுகளில் சென்னை சைபர் க்ரைம் போலீஸ் வழக்குப் பதிந்துள்ளது. *192- கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு. *196(1)பகையை வளர்க்கும் செயல். *197(1)(d) இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு தீங்கு விளைவித்தல். *353(1)(b) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வதந்திகளை வெளியிடுவது. *353(2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவல் வெளியிடுதல். அடுத்து என்ன ஆகும்?

News October 1, 2025

சிக்கன் குழம்பு கேட்ட 7 வயது மகனை கொன்ற தாய்

image

மகாராஷ்டிராவில் 7 வயது சிறுவன் தனது தாயிடம் சிக்கன் குழம்பு செய்துகொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் எரிச்சலான தாய், பூரி கட்டையால் தனது மகனை அடித்து கொன்றுவிட்டு, மஞ்சள் காமாலையால் இறந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார். ஆனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து போலீசாரிடம் தெரிவிக்க, உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!