News August 13, 2024

TN Factcheck: உதவித்தொகையில் மது அருந்தும் மாணவிகள்?

image

அரசு மாதம் கொடுக்கும் ₹1000 உதவித் தொகையில் மாணவிகள் போட்டிபோட்டு மது அருந்துவதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. இதுகுறித்து TN Factcheck, இந்த வீடியோ 2022 மார்ச் மாதத்தில் எடுக்கப் பட்டதாகவும், புதுமைப்பெண் திட்டம் கல்லூரி மாணவிகளுக்கானது, பள்ளி மாணவிகளுக்கு அல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், மாணவிகளின் அடையாளங்களை மறைக்காமல் அதனை பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்துள்ளது.

Similar News

News March 4, 2026

உலக நாடுகள் இதை பற்றி சிந்திக்காதது ஏன்?

image

ஈரானுடன் தொடங்கிய போர் 1 மாதத்திற்கு நீடித்தால் சுமார் ₹18 லட்சம் கோடி செலவாகும் என US மதிப்பீடு செய்துள்ளது. ஆனால் ₹29.31 லட்சம் கோடி இருந்தால் உலகத்தில் வறுமையே இல்லாமல் செய்யமுடியும் என UN சொல்கிறது. இந்நிலையில், மக்கள் உரிமைக்காக, பாதுகாப்புக்காக எனக் கூறி போரில் முனைப்பை காட்டும் எந்த நாடும், வறுமையில் வாடும் மக்களுக்காக இந்த நிதியை ஒதுக்குவதில்லையே என பலர் கேட்கின்றனர். உங்கள் கருத்து?

News March 4, 2026

தென் மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக, அமமுக

image

திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவே இல்லை. இன்று நடைபெறும் அதிமுக மா.செ., கூட்டத்திற்கு பிறகு தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் பாஜக, அமமுக அதிகமான இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 4, 2026

நெட் இல்லாமலும் Gmail செக் பண்ணலாம்; இதோ Trick

image

முக்கியமான மெயிலை செக் பண்ணும்போது இண்டர்நெட் கட் ஆகிடுச்சுனா? கவலையவிடுங்க. Gmail-ல் மெயில்களை Offline-லயும் Access பண்ணலாம். ➤உங்கள் Laptop-ல் Gmail-ஐ Login செய்யுங்கள் ➤செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்து ‘Quick Settings’ என்ற ஆப்ஷனை அழுத்துங்க ➤See All Settings என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதை க்ளிக் செய்தால் Offline என்ற ஆப்ஷன் வரும் ➤அதற்குள் சென்று Enable செய்யுங்க. பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!