News January 7, 2025
கனடா PM ரேஸில் TN வம்சாவளி: யார் இந்த அனிதா ஆனந்த்?

கனடாவின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவுகிறது. ஏறத்தாழ 8 பேர் PM ரேஸில் உள்ள நிலையில், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட அனிதா ஆனந்துக்கு (57), பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உள்நாட்டு வர்த்தக, போக்குவரத்து அமைச்சராக உள்ள அவர், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அமெரிக்காவில் ஒரு கமலா ஹாரிஸ் என்றால், கனடாவில் அனிதா ஆனந்த். வாய்ப்பு கிடைக்குமா?
Similar News
News September 14, 2025
சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்

சிம்பு – வெற்றிமாறன் படத்தில் பணியாற்றுவதை ஜிவி பிரகாஷ் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் சிம்பு நடிக்கவுள்ள வடசென்னை யுனிவர்ஸ் படத்தின் ப்ரோமோ வெளியானது. இதன் மிரட்டலான பின்னணி இசையை கேட்டு இசையமைப்பாளர் யாராக இருக்கும். சந்தோஷ் நாராயணனா ? ஜிவி பிரகாஷா என ரசிகர்கள் விவாதித்தனர். இந்நிலையில், அப்படம் எடுக்கப்பட்டால் தானே இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
News September 14, 2025
விஜய்யின் பரப்புரை ரத்து

பெரம்பலூரில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. விஜய் மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் வானொலித் திடல் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். ஆனால் மக்கள் கூட்டத்திற்கு இடையே அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்வதற்கு விஜய்க்கு நள்ளிரவுக்கு மேல் ஆனது. இதனால் வேறு வழியின்றி பெரம்பலூர் பரப்புரை ரத்தானது. விஜய்யின் பேச்சை கேட்க பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
News September 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 14, ஆவணி 29 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை