News February 18, 2025
TN பட்ஜெட்: இன்று முதல் ஆலோசனை

2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் இன்று தொடங்கி, தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று ஊரக வளர்ச்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நாளை வணிக வரித்துறை, 20ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில்துறைகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
Similar News
News January 19, 2026
₹6,000 அல்ல, இனி ₹8,000! வெளியான புது அப்டேட்

சிறு, குறு விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹6,000-ஐ மத்திய அரசு வழங்கி வருகிறது. 4 மாதங்களுக்கு தலா ₹2,000 என 3 தவணைகளில் இத்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், இத்தொகையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று வரும் பிப்.1-ல் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், இத்தொகையை ஆண்டுக்கு ₹8,000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 19, 2026
பாஜகவின் தேசிய தலைவராகும் நிதின் நபின்

நிதின் நபின் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய தலைவர் பதவிக்கு அவர் மட்டுமே இதுவரை மனுதாக்கல் செய்துள்ளதால், ஒருமனதாக நபின் தேர்தெடுக்கப்பட உள்ளார். PM மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளனர். நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் நபின் தலைவராக அறிவிக்கப்பட உள்ளார்.
News January 19, 2026
10th பாஸ் போதும்… ₹20,000 சம்பளம்

ஆதார் மைய அலுவலகங்களில் 282 சூப்பர்வைசர், ஆபரேட்டர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *18 வயது நிரம்பி இருக்க வேண்டும் *கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ஐடிஐ *தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் *சம்பளம்: ₹20,000 *வரும் 31-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் *விண்ணப்பிக்க <


