News January 24, 2025
TN பாஜக தலைவர் யார்? 26ஆம் தேதி அறிவிப்பு வெளியாகிறது

பாஜக மாநில புதிய தலைவர் வரும் 26ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை பதவிக்காலம் நிறைவடைந்து விட்டதால், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், புதிய தலைவர் குறித்த அறிவிப்பை பாஜக மேலிடம் விரைவில் வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News December 5, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹4,000 குறைந்தது

கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த வெள்ளியின் விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. நேற்று(டிச.04) பார் வெள்ளி 1 கிலோவுக்கு ₹1,000 குறைந்த நிலையில், இன்று(டிச.05) மேலும் ₹4,000 குறைந்து ₹1,96,000-க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் ₹1 கிராம் வெள்ளி ₹196-க்கு விற்பனையாகிறது.
News December 5, 2025
உங்கள் காரால் உயிருக்கே ஆபத்து.. BIG ALERT!

புதிய காரில் ஒருவிதமான ஸ்மெல் வருவது வழக்கமே என அலட்சியமாக இருக்கவேண்டாம். இது உயிரைக்கொல்லும் Slow poison என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புதிய காரில் உள்ள பிளாஸ்டிக் கவர், ஷீட்களில் ethylbenzene, formaldehyde, toluene போன்ற கெமிக்கல்கள் இருக்கும். இது வெயிலில்படும் போது ஒருவிதமான ஸ்மெல் வரும். இதனை நீங்கள் சுவாசித்தால் தலைசுற்றல், வாந்தியில் தொடங்கி கேன்சர் கூட வரக்கூடும் என்கின்றனர். SHARE.
News December 5, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்கான மதுரை HC உத்தரவை நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபம் ஏற்றும் உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.


