News October 28, 2024
TN ALERT App – 1 லட்சம் பேர் டவுன்லோட்
மழை வெள்ளம், புயல் பாதிப்பு போன்ற இடர்பாடுகளின் விபரங்களை தெரிந்து கொள்ளவும், வானிலை நிலவரங்களை அறிந்து கொள்வதற்கும் TN ALERT என்ற App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். அனைவரும் டவுன்லோட் செய்து பயனடையுமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
நெல்லை மாவட்ட நிர்வாகத்துடன் செயல்பட வாய்ப்பு
பேரிடர் காலங்களில் சமூகத்தை பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைதள பொறுப்பாளர்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள QR ஸ்கேன் மூலம் இணைந்து மாவட்ட நிர்வாகத்துடன் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பெற்று செயல்படலாம் என தெரிவித்துள்ளனர்.
News November 20, 2024
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எஸ்பி அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், மின்சாரம் சம்பந்தமான பொருட்களை கையாளும்போதும், வெளியில் செல்லும்போதும் கவனமுடன் இருக்குமாறும், ஆறு, குளம் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் எஸ்பி சிலம்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 20, 2024
பொதுமக்கள் தன்னை அழைக்கலாம் – பாப்புலர் முத்தையா
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் செயலாளருமான பாப்புலர் முத்தையா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தொடர் மழையால் பாதிக்கப்படும் பொதுமக்கள் 9443555503 என்ற தன்னுடைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.