News October 25, 2024
TN-Alert ஆப் டவுன்லோடு செய்து எச்சரிக்கையாக இருங்கள்.!

TN-Alert App பொதுமக்களுக்கு வெப்பநிலை, மழை போன்ற வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் வழங்குகிறது. இதில் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள், தினசரி மழை அளவுகள், நீர்த்தேக்க நிலை மற்றும் வெள்ள அபாயம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான மக்கள் புகார்களை பதிவு செய்யவும்,மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலி உதவுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 10, 2025
திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை

ஆக.10 திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் இந்த ரயில் வரும் நிலையிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பகல் நேரங்களில் ரயில் போக்குவரத்து இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
News August 10, 2025
குமரியில் மீண்டும் தொடங்கிய படகு போக்குவரத்து

கன்னியாகுமரி கடலில் இன்று காலை தாழ்வான நீர்மட்டம் காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது நீர்மட்டம் சீரானதையொட்டி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது.
News August 10, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம்: பீகார் தொழிலாளர் விவரம் பதிவு செய்க

நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் நேற்று(ஆக.9) கூறியதாவது, “பீகாரில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கிறது. இதில் நெல்லை, குமரி மாவட்டத்தில் பணியாற்றும் பீகார் தொழிலாளர்கள் மொபைல் செயலியில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து குடும்ப உறுப்பினர்களிடம் வாட்ஸ்அப்பில் அனுப்பி உதவ நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.