News November 24, 2025
TN-ல் பாஜக, RSS காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அது பிஹார், இது தமிழ்நாடு எனக் கூறியுள்ள அவர், பிஹாரில் பாஜக, JDU ஆளுங்கட்சியாக இருந்துள்ளதாகவும், தமிழகத்தில் ஒருபோதும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக, RSS எப்போதும் காலூன்ற முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
பெண்கள் பாதுகாப்பு.. இத்தாலியில் புதிய சட்டம் அமல்

பெண்களின் பாதுகாப்பிற்காக இத்தாலி அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பெண் என்ற காரணத்தினாலேயே ஒருவர் கொலை (Femicide ) செய்யப்பட்டால் அதற்கு வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்படும். 2024-ல் மட்டும் இத்தாலியில் 106 Femicides பதிவாகியுள்ளன. இதில் 62 பெண்கள் அவர்களின் பார்ட்னர் அல்லது Ex-பார்ட்னரின் ஆதிக்க மனப்பான்மையால் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்தியாவில் இதுபோன்ற சட்டம் தேவையா?
News November 28, 2025
ராசி பலன்கள் (28.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 28, 2025
13 கிமீ வேகத்தில் நகரும் ‘டிட்வா’ புயல்

<<18403328>> ‘டிட்வா’ புயல்<<>> கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக IMD தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் இந்த புயல் சென்னைக்கு மேற்கு – தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் வருகிற புயல் வருகிற 30-ம் தேதி வட தமிழகம், மேற்கு ஆந்திர கடல் பகுதியை நெருங்கும் எனவும் IMD கணித்துள்ளது.


