News November 22, 2025
TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது: அன்புமணி

சேலத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆளும்கட்சி நிர்வாகியே சுட்டுக்கொலை செய்யப்படும் அளவுக்கு TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாக கூறியுள்ள அவர், தமிழக மக்களுக்கு என்னதான் பாதுகாப்பு உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News February 15, 2026
புதுச்சேரி: NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரம்!

அமித்ஷாவை சந்தித்து பேசிய ரங்கசாமி, புதுச்சேரியில் NDA கூட்டணியில் NR காங்கிரஸ் தொடர்வதை உறுதி செய்துள்ளார். அத்துடன் அக்கூட்டணியில் NR காங்கிரஸுக்கு 16, பாஜக – 10, அதிமுக – 2, லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 என தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாம்.
News February 15, 2026
இனி IMPS மூலம் பணம் அனுப்பினால் கட்டணம்!

ஐஎம்பிஎஸ் (IMPS) முறையில் பணம் அனுப்பினால் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை இன்று முதல் SBI வங்கி அமல்படுத்தியுள்ளது. அதன்படி ₹25,000 முதல் 1,00,000 வரை IMPS முறையில் பணம் அனுப்பினால் ₹2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ₹1,00,000 முதல் ₹2,00,0000-க்கு ₹6-ம், ₹2,00,000 முதல் ₹5,00,000 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ₹10 கட்டணம் & ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 15, 2026
மகளிருக்கு ₹5,000.. அரசுக்கே பணம் ரிட்டன்!

மகளிருக்காக TN அரசு வழங்கிய ₹5,000 பணத்தை, இது ஓட்டுக்காக கொடுத்த பணம் எனக் கூறி ஒருவர் திருப்பி அனுப்பியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டி, தனது மனைவியின் ஒப்புதலுடன் CM-க்கு போஸ்ட் ஆபிஸ் மூலம் திருப்பி அனுப்பியுள்ளதாக கடிதம் எழுதியுள்ளார். இது, கடன் சுமையுடன் உள்ள திமுக அரசுக்கு என் பங்களிப்பாக இருக்கட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்து?


