News January 26, 2026

TN பெருமையை பறைசாற்றிய அலங்கார ஊர்திகள் (PHOTOS)

image

சென்னையில் நடைபெற்ற <<18959672>>குடியரசு தின நிகழ்ச்சியில்<<>>, தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனை கவர்னர் RN ரவி, CM ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

Similar News

News February 15, 2026

தமிழ் சினிமா பிரபலம் தமிழ் அழகன் காலமானார்!

image

பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான வீ. தமிழ் அழகன் வயது மூப்பு காரணமாக காலமானார். RM வீரப்பனின் மூத்த மகனான இவர், சத்யா மூவிஸ் மூலம் மூன்று முகம், காக்கி சட்டை, பணக்காரன், பாட்ஷா போன்ற மெகா ஹிட் படங்களை தயாரித்துள்ளார். மேலும், மந்திரப்புன்னகை, நிலாபெண்ணே போன்ற படங்களையும் தமிழ் அழகன் இயக்கியுள்ளார். இவரது மறைவுக்கு தமிழக திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News February 15, 2026

அதிமுகவிடம் 10 சீட் கேட்கும் ராம்தாஸ் அத்வாலே

image

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளதாக இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். அதிமுக சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றும், போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசில் சமூக நீதி துறை இணையமைச்சராக அத்வாலே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 15, 2026

தமிழகத்தின் பிரசித்த பெற்ற சிவாலயங்கள்!

image

இன்று மகாசிவராத்திரி. ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்கள் கண்டிப்பாக அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்து வாருங்கள். தமிழகத்தில் நீங்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய டாப் சிவாலயங்களின் தொகுப்பை கொண்டு வந்துள்ளோம். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்யவும். இதில் நீங்க எந்தெந்த கோயில்களுக்கு சென்றுள்ளீர்கள்?

error: Content is protected !!