News February 23, 2026
TN சட்டம்-ஒழுங்கு.. திமுகவை தாக்கும் ADMK + BJP + TVK

பெண்கள் பாதுகாப்பில் நம்.1 மாநிலமாக TN திகழ்வதாக CM ஸ்டாலின் கூறும் நிலையில், அது பொய் என அண்ணா பல்கலை., & கோவை மாணவி விவகாரத்தை சுட்டிக்காட்டி ADMK, BJP, TVK விமர்சிக்கின்றன. அதேபோல சட்டம்-ஒழுங்கு டிஜிபியை நியமிக்காததால் தான் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும் அக்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. எனவே, திமுக எதிர்ப்பில் ஒற்றை கருத்தை ADMK, BJP, TVK பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Similar News
News February 28, 2026
2 பேருக்கு மாதம் ₹82,000

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் மாதச் செலவுகள் ₹82,000 என்று தெரிவித்தது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அவர், 2BHK வீட்டின் மாத வாடகை ₹37,000, உணவு & மளிகைப் பொருட்களுக்கு ₹15,000, போக்குவரத்துக்கு ₹5,000, பிற செலவுகளுக்கு ₹4,000, வீட்டு உதவிக்கு ₹4,000, பொழுதுபோக்குக்கு ₹17,000 என 2 பேர் கொண்ட குடும்பத்திற்கான செலவுகளை பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்களிடையே பேசு பொருளாகி வருகிறது.
News February 28, 2026
சுதந்திரத்திற்கு பிறகும் அடிமை மனநிலை நீங்கவில்லை: PM

இந்தியா ஒருகாலத்தில் வெளிநாட்டு நுட்பங்களை அப்படியே காப்பி அடித்து வந்ததாக ரைசிங் இந்தியா உச்சி மாநாட்டில் PM மோடி பேசினார். சுதந்திரத்திற்கு பிறகும், நாட்டில் அடிமை மனநிலை நீண்ட காலமாக நீங்கவில்லை என்று விமர்சித்த அவர், தற்போது இந்தியா தனது பலத்தை அறிந்து அதிலிருந்து வெளியேறி வல்லரசுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நிலைக்கு வளர்ந்துள்ளது; இதைக் கண்டு சிலர் ஆச்சரியப்படுவதாக தெரிவித்தார்.
News February 28, 2026
பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க விரும்புவதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்த பதட்டங்களை தணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன. ஆப்கானிஸ்தானுடனான சண்டையில் 274 தாலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 400 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. முன்னதாக, தாலிபான் நடத்திய தாக்குதல்களில் 50 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.


