News June 28, 2024
டி.கே சிவகுமார் முதல்வராக வேண்டும்: மடாதிபதி

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகி, டி.கே.சிவகுமாரிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று வொக்கலிகா சமூக தலைவர் குமார சந்திரசேகரநாத சுவாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் சித்தராமையா முன்னிலையில் இந்த கருத்தை தெரிவித்தார். வொக்கலிகா சமூகத்தை சேர்ந்த டி.கே.சிவகுமார் தற்போது துணை முதல்வராக உள்ளார்.
Similar News
News December 9, 2025
நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.
News December 9, 2025
நார்த்தங்காயின் நன்மைகள்

நார்த்தங்காயில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி & பி அதிகம் நிறைந்துள்ளது. நார்த்தங்காய் ஊறுகாய் போட மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
இன்னும் 100 நாட்களே! யஷ் பட போஸ்டர் வைரல்!

யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படம் அடுத்த ஆண்டு, மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ளதாக கூறி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.


