News August 21, 2025

மகேஷ் பாபு பட கிளிம்ஸ் வெளியிடும் TITANIC இயக்குநர்

image

மகேஷ் பாபுவின் புதிய படத்தின் கிளிம்ஸை, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரான் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படமான ‘GEN63’-க்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், தனது Avatar: The Fire and Ash பட பிரமோஷனுக்காக இந்தியா வரும் கேமரான், மகேஷ் பாபு பட கிளிம்ஸையும் வெளியிடுகிறார்.

Similar News

News January 20, 2026

டைனோசர்களுக்கும் மூத்த நதி எது தெரியுமா?

image

பூமியின் பழமையான நதி எது தெரியுமா? ஆஸ்திரேலியாவின் பாலைவன பகுதியில் பாயும் Finke நதி! 30 முதல் 40 கோடி ஆண்டுகள், அதாவது டைனோசர்கள் பிறப்பதற்கு முன்பே ஓட தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மழைக்காலத்தில் மட்டும் ஆறாக ஓடும்; மற்ற நேரத்தில் குட்டைகளாக காட்சியளிக்கும். மலைகள் உருவாவதற்கு முன்பே இந்த நதி ஓடிக்கொண்டிருந்ததால், மெக்டோனல் மலைத்தொடரை நேர்க்கோட்டில் கிழித்துக் கொண்டு பாய்கிறது.

News January 20, 2026

யார் இந்த நிதின் நபின்?

image

பாஜகவின் தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஹார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின், பாஜக தலைவராக இருந்த நவீன் கிஷோர் பிரசாத் சின்காவின் மகன். தந்தையின் மறைவுக்கு பிறகு அவர் பிஹாரில் 5 முறை MLA-வாக வெற்றி கண்டார். இளம் வயதிலேயே பாஜக தேசிய தலைவரானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

News January 20, 2026

ராசி பலன்கள் (20.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!