News December 19, 2024
27 ஆண்டுகளை நிறைவு செய்த ‘டைட்டானிக்’

உலகெங்கிலும் உள்ள காதலர்களால் இன்றளவும் கொண்டாடப்பட கூடிய எவர்க்ரீன் கிளாசிக் ஹாலிவுட் திரைப்படம் ‘டைட்டானிக்’. ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிச.19இல் 1997ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்றளவும் நாயகன் ஜாக், நாயகி ரோஸ் உடன் பிரம்மாண்ட கப்பலில் முன்பகுதியில் நிற்கும் காட்சியை இன்றளவும் மறக்க முடியாது.
Similar News
News March 3, 2026
வெள்ளி விலை 3 நாள்களில் கிலோவுக்கு ₹10,000 குறைந்தது

தங்கம் விலை இன்று குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதன்படி, இன்றும் 1 கிராம் வெள்ளி ₹315-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. அதேநேரம், இம்மாதம் தொடங்கிய 3 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் நாள்களிலும் விலை சற்று குறையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 3, 2026
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

*1 முதல் 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். *அதை 3-ல் பெருக்குங்கள் *அதில் வரும் விடையோடு 3-ஐ கூட்டுங்கள் *கிடைக்கும் விடையை மீண்டும் 3-ல் பெருக்குங்கள் *இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும் *அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. விடை சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க. நீங்களும் நண்பர்கள் கிட்ட கேட்டு மாஸ் பண்ணுங்க.
News March 3, 2026
புத்தகம் சுமந்த பிஞ்சுகள்.. புதைக்குழிக்குள்..

இங்கு தோண்டப்பட்டுள்ள குழிகளில் பல சிரிப்புகள் புதையவுள்ளன. ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதலில் பலியான மாணவிகளை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழிகள் இவை. பள்ளிக்கு சிரித்த முகத்துடன் சென்ற குழந்தைகளின் உயிரற்ற உடல்களை பார்த்து பெற்றோர்கள் <<19277394>>கதறி அழுத காட்சி<<>> நெஞ்சை உலுக்குகிறது. அதிகார வெறிக்காக நடக்கும் போரில் ஏன் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளும், அப்பாவி மக்களும் பலியாக வேண்டும்?


