News March 17, 2024

திருப்பூர்: நாய்கள் கடித்து மான்கள் பலி

image

திருப்பூர் புதுப்பாளையம் ஊராட்சி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பிறந்து ஆறு மாதமே ஆன புள்ளிமான் ஒன்று பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது. அதேபோன்று அதே பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. விசாரணையில் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு புள்ளி மான்களும் நேற்று உயிர் இழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News January 9, 2026

திருப்பூர்: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இனி What’s App-ல்

image

திருப்பூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).

News January 9, 2026

திருப்பூர்: வீட்டில் சிலிண்டர் இருக்கா?

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)

News January 9, 2026

குண்டடம் அருகே கார் விபத்து

image

குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மின்சார அலுவலக முன்பு பல்லடத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்று கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் இவ்விபத்து குறித்து குண்டடம் போலீசார் சம்பவம் இடத்துக்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!