News March 18, 2024
திருப்பூர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன் மறுபடியும் அந்த தொகுதியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 21, 2025
அவிநாசியில் சாயம் கலந்த பட்டாணி பறிமுதல்

அவிநாசி கைகாட்டிப்புதுார் வாரச்சந்தையில் சாயம் கலந்த பட்டாணி விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் பிரபு சந்தையில் ஆய்வு நடத்தி, ரசாயன சாயம் பூசப்பட்ட 6 கிலோ பட்டாணியை ஒரு வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்தார். முதல் முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீண்டும் இதுபோல் நடந்தால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது
News August 21, 2025
திருப்பூரில் திடீர் மாற்றம் தெரிஞ்சிக்கோங்க!

திருப்பூர், அணைப்பாளையத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், இன்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வஞ்சிபாளையம் – புஷ்பா சந்திப்பு: அவிநாசி சாலை அல்லது ரங்கநாதபுரம் வழியாகச் செல்லலாம்.சிறுபூலுவப்பட்டி வழியாக குமார் நகருக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுபூலுவப்பட்டிக்குச் செல்லும் வாகனங்கள் சலவை பட்டறை சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.SHARE பண்ணுங்க!
News August 21, 2025
திருப்பூர் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில், மங்களம் சாலை மற்றும் சிறுபூலுவப்பட்டியை பகுதியை இணைக்க கூடிய வகையில், ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 நாட்களுக்கு வஞ்சிபாளையத்திலிருந்து புஷ்பா ரவுண்டானா வருகின்ற பகுதியில், சோதனை அடிப்படையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.