News August 27, 2025
₹500 கோடி இழப்பு.. தவிப்பில் திருப்பூர் நிறுவனங்கள்!

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68% திருப்பூரில் இருந்தே நடக்கிறது. இந்நிலையில் டிரம்ப் விதித்த 50% வரியால் பின்னலாடை நிறுவனங்களுக்கு தினசரி ₹500-₹700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ₹4,000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவுடன் இந்த வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Similar News
News April 13, 2026
காமராஜரை திமுக கொச்சைப்படுத்தியது: EPS

காமராஜர், MGR, ஜெ., ஆகியோரை கொச்சைப்படுத்துவதே திமுகவினரின் வேலை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். காமராஜர் பற்றி கொச்சையாக பேசிய திருச்சி சிவாவை ஸ்டாலின் கண்டிக்க தவறியதாக அவர் விமர்சித்தார். தனிப்பட்ட தாக்குதல் விமர்சனம் பற்றி பதிலளித்த அவர் உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்றார். இனி கொச்சைப் பேச்சுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் எனவும் EPS கூறினார்.
News April 13, 2026
நல்லா படித்த குழந்தை இப்போ Dull-ஆ படிக்குதா?

நன்றாக படித்து வந்த உங்கள் குழந்தை திடீரென குறைவான மதிப்பெண் வாங்குகிறார்களா? அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த இவற்றை செய்யலாம். ▶குழந்தையை முட்டாள் என கூற வேண்டாம் ▶எப்போதும் 1st Rank எடுக்க சொல்லாதீர்கள் ▶ படிக்கும்போது அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் சாதனங்களை ஒதுக்கிவையுங்கள் ▶பள்ளியில் ஏதேனும் பிரச்னையா என கேளுங்கள் ▶விளையாட அனுப்புங்கள் ▶ சின்ன சின்ன பாராட்டுகளை வழங்குங்கள். SHARE.
News April 13, 2026
கடலிலும் பாகிஸ்தானை கதறவிடும் BLA

ஈரான் எல்லை அருகே பாகிஸ்தான் கடலோரப் படை ரோந்து படகின் மீது பலுசிஸ்தான் விடுதலை படை(BLA) நடத்திய தாக்குதலில் 3 பாக்., வீரர்கள் உயிரிழந்தனர். கடல்சார் எல்லைகளில் தங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான புதிய உத்தி இது என BLA கூறியுள்ளது. BLA-வுக்கு ஆப்கானிஸ்தான் அரசு புகலிடம் அளிப்பதாக பாக்., குற்றஞ்சாட்டும் நிலையில், அதற்கு தாலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


