News March 18, 2024
திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் முதியவர் பலி

ஆம்பூர் அருகே ஜாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலீம்முல்லா (வயது 76). இவர் இன்று (மார்ச் 18) அதிகாலை 3 மணியளவில் ஆம்பூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாம்ராஜ் எக்ஸ்பிரஸில் தனது மகளை பார்க்க பெங்களூர் சென்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே திடீரென ஓடும் ரயிலில் அவர் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News November 1, 2025
திருப்பத்தூர்: அலுவலர்கள் தாமதத்தால் மக்கள் பரபரப்பு

திருப்பத்தூர், கந்திலி ஒன்றியம் கிழக்குபதனவாடி ஊராட்சியில் இன்று (நவ.01) காலை 11 மணியளவில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெயற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி துறை, வேளாண் துறை, மின்சாரத்துறை, காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சுகாதாரத்துறை சேர்ந்த அலுவலர்கள் யாரும் வராததால் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
News November 1, 2025
திருப்பத்தூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 1, 2025
திருப்பத்தூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

திருப்பத்தூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


