News September 20, 2024
திருப்பதி லட்டு விவகாரம்: ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு

திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கேட்டுக்கொண்டுள்ளார். அறிக்கையை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் ஆய்வு செய்தபின், தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
3 மணி நேரத்தில் பணம் டெபாசிட்.. விரைவில் அமல்!

காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. பணமாக்கும் செயல்பாட்டுக்கு CTS முறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக மாற்றும் முறையை செயல்படுத்த வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. Continuous Clearing, Settlement on Realisation முறையில் இச்செயல்பாடு விரைவாக முடிக்கப்படும். அக்.4 முதல் அமலுக்கு வரும் புதிய முறையால் தனிநபர்கள், நிறுவனங்களின் சிரமம் குறையும்.
News August 20, 2025
சவுதியின் நவீன வான்வெளி மைதானம்!

2034 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக சவுதி அரேபியா ஒரு புதுமையான மைதானத்தை உருவாக்க உள்ளது. அந்நாட்டின் The Line ஸ்மார்ட் சிட்டியில், பாலைவனத்தில் இருந்து 350 உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் மைதானம் கட்டப்பட உள்ளது. 46,000 பேர் அமரும் வகையில், $1 பில்லியன் மதிப்பில் அந்த வான்வெளி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் 2027-ல் தொடங்கப்பட்டு 2032-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
News August 20, 2025
ஒழுக்கம் பற்றி எனக்கு சொல்கிறீர்களா? அமித்ஷா

2010-ல் அமித்ஷா குஜராத் அமைச்சராக இருந்த போது, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார், அப்போது அவர் ஒழுக்கத்தை நிலைநாட்டினாரா என லோக்சபாவில் காங்., MP வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமித்ஷா, உடனே ராஜினாமா செய்துவிட்டு, போலி வழக்கில் விடுதலையாகும் வரை எந்த பதவியையும் ஏற்கவில்லை, எனக்கு யாரும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டாம் எனக் காட்டாமாக தெரிவித்தார்.