News February 23, 2025
திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு டிக்கெட்டுகள் நாளை வெளியாக உள்ளது. திருமலை செல்வோர் 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யலாம். அந்தவகையில், மே மாதத்திற்கான டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கும், தங்கும் விடுதிக்கான டிக்கெட்டுகள் மாலை 3 மணிக்கும் வெளியாகிறது. டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in/ என்ற தளத்தில் பெறுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News February 23, 2025
51ஆவது சதம் விளாசினார் விராட் கோலி

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் 3ஆவது விக்கெட்டுக்கு காேலி களமிறங்கினார். முதலில் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். பின்னர் கில் அவுட்டாகி வெளியேறவே, ஸ்ரேயஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். கடைசிவரை களத்தில் நின்ற கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இது ODIஇல் காேலியின் 51ஆவது சதம் ஆகும்.
News February 23, 2025
BIG BREAKING: இந்தியா அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 241 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 242 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசினார்.
News February 23, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் ஜேசன் காலமானார்

ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான பீட்டர் ஜேசன்(80) காலமானார். அவரது மரணத்துக்கான காரணம் பற்றி தகவல் வெளியாகவில்லை. 1960களில் அறிமுகமான இவர் டெட்வுட், கராத்தே கிட் போன்ற படங்களால் பிரபலமானார். இதுவரை 270 படங்கள், தொடர்களில் நடித்துள்ள இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுகிறார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.