News October 2, 2025
திருப்பதி சக்ர ஸ்நானம் PHOTOS

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று, சக்ர ஸ்நானம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீவாரி புஷ்கரணியில் புனித நீராடினர். காலை 6 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீ பூவராக சுவாமி கோயில் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருடன் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ மலையப்ப சுவாமிகளுக்கு திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
Similar News
News October 2, 2025
பறக்கும் நரி தெரியுமா? பாருங்க

ராஜஸ்தான்-குஜராத் எல்லைப் பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள், கிட்டத்தட்ட 5 அடி இறக்கைகள் கொண்ட பெரிய வௌவால்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பெரிய வௌவால்களுக்கு நரி போன்ற முகம் இருப்பதால் இதனை ‘பறக்கும் நரி’ என்றும் அழைக்கின்றனர். பெரும்பாலும் பழங்களை உண்ணும் இந்த வௌவால்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலே, போட்டோக்கள் உள்ளன. நீங்க இதுபோன்று பார்த்ததுண்டா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 2, 2025
பாகிஸ்தானின் வரலாற்றையே மாற்றுவோம்: ராஜ்நாத் சிங்

இந்திய – பாக்., எல்லை பகுதியான Sir Creek sector-ல் பாகிஸ்தான் அடாவடித்தனம் செய்தால், இந்தியா தீர்க்கமான பதிலடி கொடுக்கும் என ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். குஜராத் ராணுவ முகாமில் பேசிய அவர், இந்தியாவின் பதிலடி என்பது பாகிஸ்தானின் நிலப்பரப்பு, வரலாற்றை அடியோடு மாற்றும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 1965-ல் இந்திய படைகள் லாகூர் வரை சென்றதை பாக்., மறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News October 2, 2025
கொசுக்களால் ரத்தம் குடிக்காமல் வாழமுடியுமா?

கொசுக்கள் உயிர்வாழ ரத்தம் தேவையில்லை என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், கொசுக்கள் பூக்களின் தேனை உண்டு வாழ்கின்றன. இதில், முட்டையிடும் பெண் கொசுக்களுக்கு புரதம், இரும்பு சத்து தேவைப்படுவதால் அவை ரத்தத்தை குடிக்கின்றன. ஆனால், பெண் கொசுக்கள் ரத்தம் குடிக்கவில்லை என்றாலும் 2 வாரங்களில் இருந்து 1 மாதம் வரை உயிரோடு இருக்கும். இந்த தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணலாமே.